ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள் நாள் விழா

புதுச்சேரி; கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியி யல் கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாணவர்களின் கைகளில் ஜோதியை ஏந்தி அணிவகுப்புடன் துவங்கியது.
அறிவியல் மற்றும் மனிதவியல் துறைப் பேராசிரியர் சக்திமுருகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
விழாவில், செயலாளர் சிவ்ராம் ஆல்வா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், 'வாழ்வில் நாம் எந்த சூழலிலும் நம் விடாமுயற்சியை கைவிடக் கூடாது நம் தோல்வியில் இருந்து தான் நாம் நமக்கான வெற்றிப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வெற்றியோ தோல்வியோ இருப்பதைக் கொண்டு மகிழ்வோடு வாழவேண்டும். நம் உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்க யோகா மிகவும் அவசியம்' என்றார்.
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அறங்காவலர் சிந்து, முதல்வர் மகேந்திரன், டீன் அகாடெமிக்ஸ் கனிமொழி ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிழத்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லுாரியின் தலைவர் ராஜா, பொருளாளர் விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மனிதவியல் துறைப் பேராசிரியர்சக்திமுருகன், இயந்திரவியல் துறைப் பேராசிரியர் பிரேமானந்த் உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
பேராசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
மேலும்
-
ரேணுகாதேவி கோவிலில் 101வது ஆண்டு கரக திருவிழா
-
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜூலையில் மெட்ரோ ரயில்
-
'ட்ரோன்' உற்பத்தி நிறுவன தரவு திருட்டு? எஸ்.ஐ.டி., அமைத்தது உயர் நீதிமன்றம்!
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!