கண்காணிப்பு கேமரா துவக்க விழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை டி.எஸ்.பி., லாமேக் துவக்கி வைத்தார்.

பரங்கிப்பேட்டையில் வட்டார நகர வர்த்தக சங்கம் சார்பில், முக்கிய இடங்களில் புதியதாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும், பழைய கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடந்தது.

நகர வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர்.

வர்த்தக சங்க பொதுச் செயலாளர் சாலிஹ் மரைக்காயர் வரவேற்றார். டி.எஸ்.பி., லாமேக், வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம் ஆகியோர் கண்காணிப்பு கேமராக்களை துவக்கி வைத்தனர். விழாவில், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தி.மு.க., நகர செயலாளர் முனவர் உசேன், முன்னாள் துணை சேர்மன் நடராஜன், கவுன்சிலர்கள் ஜெயந்தி ஜெய்சங்கர், தையல்நாயகி கணேசமூர்த்தி, வர்த்தக சங்க நிர்வாகிகள் கவிமதி, நடராஜன், அய்யப்பன், அஷ்ரப் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி தொடர்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement