கண்கள் தானம்: ஆசிரியர்களுக்கு பாராட்டு

மந்தாரக்குப்பம்; நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் கிளைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி முதல்வர் ஜோன் அலெக்ஸியஸ் மரியா வழிகாட்டுதலின் படி 38 பேர் கண்தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
ஜவகர் பள்ளி கல்வி செயலாளர் கல்பனாதேவி தலைமை தாங்கி கண் தானம் செய்ய முன்வந்த 38 பேரை பாராட்டினார். உதவி செயலாளர் அருளழகன் முன்னிலை வகித்தார்.
கண் தானம் செய்ய முன் வந்தவர்கள், புதுச்சேரி அரிவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் சுனில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று அடையாள அட்டை பெற்றுக் கொண்டனர்.
விழாவில், என்.எல்.சி., ரத்த வங்கி அழகுராஜ், பள்ளி துணை முதல்வர்கள் தனம், அஸ்வதி, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு
-
ஓலா விற்பனை சர்ச்சை: செபி விசாரணை துவக்கம்