பா.ஜ., பிரமுகர் கொலையில் முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு

புதுச்சேரி; லாஸ்பேட்டை பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கருணா உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கர், 38. பா.ஜ., பிரமுகரான இவரை, கடந்த 26ம் தேதி இரவு கருவடிக்குப்பத்தில் 5 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் சரிமாரியாக வெட்டி கொலை செய்தது.

லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடியான கருணா தனது கூட்டாளிகள் 11 பேருடன் திட்டம் தீட்டி, உமா சங்கரை கொலை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, கருணாவின் கூட்டாளிகள் ஏழுமலை மகன் செல்வ கணபதி, 25; சண்முகம் மகன் பாலாஜி, 26; உள்ளிட்ட 8 பேரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான ரவுடி கருணா உள்ளிட்ட 4 பேர், கடலுாரில் பதுங்கிருப்பதாக போலீசார் தகவல் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கடலுார் சென்று கருணா, 41;அவரது கூட்டாளிகள் சஞ்சய், 24;அகிலன், 25;ஆகியோரைகைது செய்து விசாரணை நடத்தினர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சூரியாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement