குளத்து நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பலி
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கரிம்பா மூன்னேக்கர் துடிக்கோடு வனப்பகுதியில் பழங்குடி இனத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் பிரகாசன் - -அனிதா தம்பதி வசிக்கின்றனர். இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில், பிரகாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தம்பதியின் குழந்தைகள், பிரதீப், 7, பிரதீஷ், 4 மற்றும் சகோதரி ராதிகா, 10, ஆகியோர் நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூவரையும் நேற்று மதியத்தில் இருந்து காணவில்லை என, குடும்பத்தினர், உறவினர்கள் தேடி வந்தனர்.
பின், வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் குழந்தைகளின் காலணிகள் கிடப்பதை பார்த்தனர்.
இதையடுத்து, குளத்தினுள் தேடியதில், குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement