பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது சென்னை அணி

1

சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி, சென்னை அணியை வீழத்தியது. இதன் மூலம், முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை அணி.


பிரீமியர் லீக் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.


டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரஷீத் மற்றும் ஆயுஷ் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். ரஷீத் 11 ரன்களும் ஆயுஷ் 7 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறுது நேரம் தாக்குபிடித்த டெவால்டு ப்ரேவிஸ் 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.


அதிரடியாக ஆடிய சாம் கரண் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 4 சிக்ஸர் உள்பட 9 பவுண்டரிகள் உள்பட 88 ரன்கள் எடுத்து அவுட்டானார்.பஞ்சாப் அணியின் சஹால் 19வது ஓவரில், 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இறுதியில் சென்னை அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சஹால் 4 விக்கெட்டுகளும் ஜான்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 191 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷி 23 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரப்சிம்ரன்சிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங்க் 23 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐய்யர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை அணி, ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.

Advertisement