இந்தியாவுக்கு 25 பதக்கம்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் (15 வயது) இந்தியாவுக்கு 11 தங்கம் உட்பட 25 பதக்கம் கிடைத்தது.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 15 வயதுக்குட்பட்டோருக்கான பைனல் நடந்தது.
பெண்களுக்கான 33 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் கோமல், கஜகஸ்தானின் ஐயாரு ஓங்கர்பெக் மோதினர். இதில் கோமல் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் குஷி (35 கிலோ), தமன்னா (37 கிலோ), ஸ்வி (40 கிலோ), மில்கி (43 கிலோ), பிரின்சி (52 கிலோ), நவ்யா (58 கிலோ), சுனைனா (61 கிலோ), ட்ருஷனா (67 கிலோ), வன்ஷிகா (70+ கிலோ) வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றனர். பெண்கள் பிரிவில் (15 வயது) 10 தங்கம், 4 வெண்கலம் கிடைத்தது.
ஆண்களுக்கான 35 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சன்ஸ்கர் வினோத் 5-0 என, உஸ்பெகிஸ்தானின் சர்மத் ஷோகரிமோவை வீழ்த்தி தங்கம் வென்றார். மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ருத்ராக் ஷ் சிங் (46 கிலோ), அபிஜீத் (61 கிலோ), லக்சய் போகத் (64 கிலோ) தோல்வியடைந்த வெள்ளி வென்றனர். ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் கிடைத்தது.
ஒட்டுமொத்தமாக 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 11 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் என, 25 பதக்கம் கிடைத்தது.
மேலும்
-
விமானத்தில் வந்த லக்கேஜ் காணோம்: 'இண்டிகோ' மீது தி.மு.க., - எம்.பி., புகார்
-
பத்மஸ்ரீ விருது பெற்ற 'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து
-
சீமான் தலை இருக்காது: வலைதளத்தில் மிரட்டல்
-
பெங்களூரில் பீர் விலை 'விர்ர்ர்ர்ர்!'
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம்
-
மின்சார வாகனங்களுக்கு மஹாராஷ்டிராவில் சலுகைகள்! வரி ரத்து, சுங்க வரியில் விலக்கு, மானியம் அறிவிப்பு