போபண்ணா ஜோடி அபாரம்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அமெரிக்காவின் நாதனியல், ஜாக்சன் ஜோடியை எதிர்கொண்டது. 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-7 என இழந்தது.
பின் சுதாரித்த போபண்ணா ஜோடி அடுத்த செட்டை 7-5 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' 10-7 என வென்றது. ஒரு மணி நேரம், 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 6-7, 7-5, 10-7 என போராடி வெற்றி பெற்றது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் ஜோடி, பின்லாந்தின் ஹாரி, பிரிட்டனின் ஹென்றி ஜோடியை சந்தித்தது. இதில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
மேலும்
-
மிகப்பெரிய போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா
-
கைலாசநாதர் கோவில் குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
-
புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை 3 மாதமாக பூட்டி கிடக்கும் அவலம்
-
தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் பதற்றம்
-
சில வரி செய்தி
-
நம்புதாளை ஜமாத்தில் ரூ.90 லட்சம் கடன் வாங்கிய ஈரோடு காங்., நிர்வாகி கடத்தலா