சில வரி செய்தி
* இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு மே 4ம் தேதி, மதியம் 2:00 முதல், 5:00 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. தேர்வர்கள், 'https://neet.nta.nic.in/' என்ற இணையதளத்திலிருந்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், ரயில்வே, வங்கி உள்ளிட்ட, மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை எழுதுவோருக்கு, உணவு, தங்குமிடத்துடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், சேர விரும்புவோர், மே 13ம் தேதிக்குள், 'https://www.naanmudhalvan.tn.gov.in' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மே, 31ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறும், 1,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement