செஸ்: பிரக்ஞானந்தா மூன்றாமிடம்

வார்சா: கிராண்ட் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் பிடித்தார்.
போலந்தில் கிராண்ட் செஸ் தொடர் நடந்தது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' செஸ் போட்டியில் அரவிந்த் இரண்டாவது இடம் பிடித்தார். அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகம்) செஸ் நடந்தது.
நேற்று 9 சுற்று போட்டி நடந்தன. பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா, போலந்தின் ஜான் டுடா, பல்கேரியாவின் டோபலோவ், இந்தியாவின் அரவிந்த், ருமேனியாவின் டேவிட்டை சாய்த்தார்.
மொத்தம் 18 சுற்று முடிவில் 10.5 புள்ளி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா (10 வெற்றி, 1 'டிரா', 7 தோல்வி) மூன்றாவது இடம் பிடித்தார்.
ஒட்டுமொத்தமாக ('ரேபிட்', 'பிளிட்ஸ்') பிரக்ஞானந்தா 20.5 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். இவருக்கு ரூ. 21.14 லட்சம் பரிசு கிடைத்தது. சுலோவேனிய வீரர் விளாடிமிர் பெடோசீவ் (26.5), பிரான்சின் மேக்சிம் வாசியர் (21.5) முதல் இரு இடம் பிடித்தனர். அரவிந்த் (17.0, ரூ. 7.6 லட்சம்) 8வது இடம் பெற்றார்.

Advertisement