குண்டும், குழியுமான மதுார் கூட்டுச்சாலை

வாலாஜாபாத்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- சாலவாக்கம் சாலையில் மதுார் கூட்டுச்சாலை உள்ளது.

மதுார் கூட்டுச்சாலை சுற்று வட்டார கிராமங்களின் மையப் பகுதியாக உள்ளது.

மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர், இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

மதுார் சுற்று வட்டார கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

இந்த தொற்சாலைகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், மதுார் கூட்டுச்சாலை வழியாக இரவு, பகலாக இயக்கப்படுகின்றன.

இதனால், மதுார் கூட்டுச்சாலையின் சாலை குண்டும், குழியுமாக சேதமான நிலையிலேயே காணப்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, மதுார் கூட்டுச்சாலை பகுதியில், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement