அக் ஷய திரிதியையொட்டிதங்கம் வாங்க திரண்ட மக்கள்




நாமக்கல்தமிழகத்தில் தங்க நகை பயன்பாடு மற்றும் விற்பனை அதிகம் உள்ளது. அக் ஷய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதன்படி, இந்தாண்டு அக் ஷய திரிதியான நேற்று, நாமக்கல் கடை வீதியில் உள்ள தங்க நகைக்
கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர்.

அதனால், கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களின் வாடிக்கையான கடைகளுக்கு சென்ற பொதுமக்கள், தங்க காசு, செயின், வளையல், மோதிரம், பிரேஸ்லெட், தோடு போன்ற தங்க நகைகளை வாங்கி சென்றனர்.
'அக் ஷய திரிதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும்' என்ற நம்பிக்கையின் காரணமாக, ஏராளமான பொதுமக்கள், நகை கடைகளுக்கு படையெடுத்தனர்.

Advertisement