பாறைக்குழியில் விழுந்தவர் பலி

அனுப்பர்பாளையம் : பாறைக்குழியில் விழுந்து ஒருவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர், போயம்பாளையம் கிழக்கு - குருவாயூரப்பன் நகரில் உள்ள பாறைக்குழியில், அதிக அளவில் தண்ணீர் உள்ளது.

பாறைக்குழி அருகே அமர்ந்திருந்த ஒருவர் திடீரென உள்ளே விழுந்தார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர், தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement