பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

பொள்ளாச்சி : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, பொள்ளாச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, மாவட்டச் செயலாளர் நிவாஷ் வரவேற்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டப் பொருளாளரான பாக்யராஜூ, ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு முன்னாள் மாநில தலைவர் மணி, நினைவுப் பரிசு வழங்கினார்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் நாச்சிமுத்து, நகர கிளை முன்னாள் செயலாளர் மனோகரன், கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement