பாரதிதாசன் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ்ச்சங்கம், பகுத்தறிவு இலக்கிய மன்றம், சங்கை தமிழ்ச்சங்கம், சங்கராபுரம் இலக்கிய பேரவை மற்றும் உலக தமிழ் கவிஞர் பேரவை இணைந்து, பாரதிதாசன் பிறந்தநாள் மற்றும்

திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழாவை நடத்தியது.

முன்னாள் மருத்துவத்துறை உதவி இயக்குனர் உதயகுமார் தலைமை தாங்கி, திருக்குறள் பலகையை திறந்து வைத்தார். முன்னாள் ஆசிரியர் ஆறுவிரல் ஐம்பொறி முன்னிலை வகித்தார். பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார்.

கல்லை தமிழ்ச்சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன் - உவமைக்கவிஞர் சுரதா; மாவட்ட கம்பன் கழக தலைவர் சுலைமான் - திருவள்ளுவர்; கல்வராயன்மலை தமிழ்ச்சங்க தலைவர் மலரடியான்-பாரதிதாசன்; ஆகியோர் படங்களை திறந்து வைத்தனர்.

தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆராவமுதன் தலைமையில் கவிஞர்கள் சண்முகம், சாதிக்பாட்ஷா, அறிவழகன், ஜெயப்பிரகாஷ், சண்முகபிச்சப்பிள்ளை, முருகன், விஜயகுமார் ஆகியோர் கவியரங்கில் பங்கேற்றனர்.

சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, உலக தமிழ் கவிஞர் பேரவை செயலாளர் சாந்தகுமார் சொற்பொழிவாற்றினர். செயலாளர் மதியழகன் நிகழ்ச்சியை தொகுத்தார்.

தவமணி சாந்தகுமார் நன்றி கூறினார்.

Advertisement