அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, தலைமை அஞ்சலகம் முன், விருத்தாசலம் கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பொருளாளர் சண்முகம், செயலாளர் துரை முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணி பாதுகாப்பு, நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் முன் வைக்கப்பட்டன.

Advertisement