ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார வள மையத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் மோகன் சவுந்தரராஜன், மேற்பார்வையாளர் பால்தாஸ் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 15 பேரின் பணியை பாராட்டி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் அதிக மாணவர்களை வெற்றி பெற செய்த ஆசிரியர்கள், ஆங்கிலம் வாசித்தலுக்காக காணொளி அமைத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும்.

விடுமுறை காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement