பொது இடங்களில் குப்பை எரித்தால் அபராதம்

விருதுநகர்: விருதுநகரில் பொது இடங்களில் குப்பையை எரித்தால் அபராதம் வசூலிக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மாவட்டத்தில் ரோட்டோரம், நீர்நிலை, பொது இடங்களில் குப்பை, இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.

நகராட்சிகள் சட்டப்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் வசூலித்து செயல்படுத்தவும், நச்சுத் தன்மை கழிவுகளையோ, மலக் கழிவுகளையோ, மருத்துவக் கழிவுகளையோ மாற்றம் செய்தல், ரோட்டில் கொட்டுதல், கழிவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே இதனை மீறுவோர் மீதும், திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்போர் மீதும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

Advertisement