கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!

2


ஓசூர்: கர்நாடகா - சித்ரதுர்கா அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.


கர்நாடகா - சித்ரதுர்கா அருகே சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ்காரர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அர்ஜூன் (28), சரவணா (31), செந்தில் (29) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.


மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காரை டிரைவர் அதிவேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement