குண்டு மிளகாய் வத்தலை குறைந்த விலையில் வாங்கும் வியாபாரிகள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் குண்டு மிளகாய் வத்தலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலையில் கார்ப்பரேட் வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே பரளச்சி, பூலாங்கால், போத்தம்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம், புல்லா நாயக்கன்பட்டி உள்ளிட்ட 35 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குண்டு மிளகாய் வத்தல் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 4 முறை களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் உள்ளது. 1 ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தால் தான், செலவு போக விவசாயிக்கு 4 ஆயிரத்து 800 ரூபாய் 1 ஏக்கருக்கு கிடைக்கும்.
சென்ற ஆண்டு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு தயாராக உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் கார்ப்பரேட் வியாபாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக ஒரு குவிண்டாலுக்கு 7 ஆயிரம் ரூபாய் என, விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடன் வாங்கி விவசாயம் செய்து விற்பனைக்கு தயாராக வைத்திருக்கும் மிளகாய் வியாபாரிகள் கட்டுப்படியாகாத விலையில் வியாபாரிகள் கேட்பதால் விற்பதா வேண்டாமா என்ற விரக்தி உள்ளனர். பலர் கடன் வாங்கி விவசாயம் செய்வதால் கடன் அடைப்பதற்கு பணம் தேவைப்படுதால் வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு விற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சங்கரபாண்டி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மாவட்ட தலைவர்: கட்டுப்படியாகாத விலையில் குண்டு மிளகாய் வத்தலை கார்ப்பரேட் வியாபாரிகள் குறைத்து கேட்கின்றனர். அரசு இதில் தலையிட்டு விவசாயிகளை பாதிக்காதவகையில் மிளகாய் வத்தலுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கடன் வாங்கி விவசாயம் செய்வதால் கார்ப்பரேட் வியாபாரிகள் சொல்லும் விலைக்கு விற்க விவசாயிகள் பணத்தின் தேவை, அவசரம் கருதி சம்மதிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அரசுதான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு