ரேஷன் கடையில் நடைமுறைக்கு வராத டிஜிட்டல் பரிவர்த்தனை
பல்லடம் : ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அறிவிப்புடன் நின்றது.
குக்கிராமங்களில் துவங்கி, பிளாட்பாரக் கடைகள் முதற்கொண்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்டன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், 'க்யூ ஆர் கோடு' முறையைப் பின்பற்றி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என, கடந்த, 2023ம் ஆண்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் சில கடைகளில் மட்டும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டுவரப்பட்டது.
இது, முழுமையாக கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு மேல் ஆகியும், வெறும் அறிவிப்போடு நின்று போனது.
இன்று, பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை பின்பற்றியே நடந்து வருகிறது. ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டுவரப்படாததால், பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு சில்லறை பிரச்னை மற்றும் காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது.

மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு