பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 8ல் விசாலாட்சி, சந்திரசேகரர் திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா, சந்திர சேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு நந்திக்கொடி ஏற்றப்பட்டு அபிஷேகம், மகாதீப ஆராதனை நடந்தது. மாலை சிம்மாசனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர்.
தினமும் காலை, மாலை சந்திரசேகர சுவாமி பிரியா விடையுடனும், விஷாலாட்சி அம்பாள் தனியாகவும் நந்தி, கிளி, குண்டோதரன், சிம்மம், கைலாச கற்பக விருட்சம், அன்னம், ராவண கைலாசம், காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
மே 6 காலை நடராஜர் புறப்பாடு, மாலை குதிரை வாகனத்தில் திக் விஜயம் நடக்கிறது. மே 7 காலை விசாலாட்சி அம்பாள் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை சுவாமி அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது.
மே 8 காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் சுவாமி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், விசாலாட்சி, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இரவு சுவாமி அம்பாள் யானை வாகனம், பூப் பல்லக்கில் உலா வருவர்.
மே 9 காலை 9:00 மணிக்கு மேல் சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி நடந்து, கொடி இறக்கப்படும். மே11 உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.
மேலும்
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது