தண்ணீரில்லாத அகதிகள் முகாம் தொட்டி கட்டியும் பயனில்லை

சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம் கவுரிப்பட்டி அருகே சென்னாலகுடி அகதிகள் முகாமில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.

தண்ணீருக்காக 2 கி.மீ.,துாரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 2023ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொட்டி கட்டி 2 வருடம் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. கோடை என்பதால் மக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

முகாமில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. மாவட்ட நிர்வாகம் சென்னாலகுடி முகாமில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து தெருவிளக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement