பாலமேடு சமுதாய கூடத்தில் வீணானது ரூ.12.50 லட்சம்

பாலமேடு: பாலமேடு பேரூராட்சியில் கட்டிய சமுதாயக்கூடம் இன்றுவரை பயன்பாடு இல்லாததால் மூடியே கிடக்கிறது.

இங்குள்ள பஸ்ஸ்டாண்ட், பேரூராட்சி அலுவலகம் அருகே 2009ல் ரூ.12.50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாயக்கூடம் முன்டு 2018ல் ரூ.ஒரு கோடி மதிப்பில் உழவர் சந்தை கட்டினர். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தற்போதுவரை இந்த சமுதாயக் கூடத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டுமே நடந்துள்ளது.

பேரூராட்சியின் மின்சாதனம் உள்ளிட்ட பொருட்களை இங்கு வைத்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமுதாயக் கூடத்தை பொது மக்கள் பயன்படுத்த முடியாமல், அதிகசெலவில் தனியார் மண்டபங்களை நாடிச் செல்கின்றனர். இப்பகுதியினர் பயன்படும் வகையில் சமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டும்.

Advertisement