சிருங்கேரி மடத்தில் சங்கர ஜெயந்தி விழா
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு, அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் உள்ள சிருங்கேரி சங்கர மடங்களில் நாளை (மே2) சங்கர ஜெயந்தி விழா நடக்க உள்ளது. பைபாஸ் ரோடு மடத்தில் ஏப்.,28 முதல் தினமும் காலை 8:00 மணி, மதியம் 3:30 மணி, மாலை 6:00 மணிக்கு ரிக்வேத பாராயணம் நடந்து வருகிறது.
தினமும் காலை 9:00 மணிக்கு ஆதிசங்கரருக்கு மகன்யாச ருத்ராபிேஷகம், அர்ச்சனை, மாலை 5:00 மணிக்கு ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள் பாராயணம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. நாளை சங்கரஜெயந்தியை முன்னிட்டு இரு மடங்களிலும் காலை 8:00 மணிக்கு ருத்ர ஏகாதசினி அபிேஷகம், ருத்ர ேஹாமம், அர்ச்சனை நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு மகா பிரசாதம் வினியோகம் நடைபெறும். மாலை 5:30 மணிக்கு சங்கர அஷ்டோத்திர பாராயணம் நடக்கிறது. பைபாஸ் ரோடு மடத்தில் மாலை 6:30 மணிக்கு பாலசுப்பிரமணிய சாஸ்திரிகள் 'ஆன்மிகமும், ஆதி சங்கரரும்' என்ற தலைப்பில் பேசுகிறார்.
மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு