டாஸ்மாக் பாரில் தகராறு ராணுவவீரர் கைது
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி டாஸ்மாக் பாரில் உரிமையாளரின் மண்டையை உடைத்த ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இக் கடையை ஒட்டிய பாரில் நேற்று முன்தினம் இரவு கும்பல் ஒன்று மது குடித்தனர். இரவு 11 மணி ஆனதால் கிளம்புங்கள் என்று பார் நடத்தும் அனுமந்தன்பட்டியை சேர்ந்த கல்யாணி 48,கூறினார். மது குடித்துக் கொண்டிருந்த புதுப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் 33, சிவக்குமார் 32 நிதிஷ் குமார் 28 ஆகியோர் கல்யாணியுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறில் கட்டை, கத்தியால் மூவரும் சேர்ந்து கல்யாணியை தாக்கியதில் மண்டை உடைந்தது. மூவரும் ஒடினர். கல்யாணி தேனி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரீஸ்வரனையும், சிவக்குமாரையும் கைது செய்தனர். நிதிஷ் குமார் தப்பியோடி விட்டார். கைது செய்யப்பட்ட இருவரில் மாரீஸ்வரன் இராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது