கல்விதான் சமூக மாற்றங்களுக்கான அடிப்படை பள்ளி திறப்பு விழாவில் கலெக்டர் பேச்சு

தேனி,: கல்வி தான் தனிமனித, சமூக மாற்றங்களுக்கான அடிப்படை என லைப் இன்னோவேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேசினார்.
வடபுதுப்பட்டியில் லைப் இன்னோவேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்து திறந்து வைத்தார். மதுரை ஆதினம் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகர மன்னார் ராமானுஜ சுவாமிகள், தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்து சித்ரா, எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார்.கலெக்டர் பேசியதாவது: தமிழகத்தில் கல்வியில் சிறந்த நிலையில் உள்ளது. இங்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வகுப்பறைகள் அமைந்துள்ளன. அரசு பள்ளிகளிலும் அமைக்க முயற்சிப்போம்.
கல்வி தான் தனிமனித, சமூக மாற்றங்களுக்கான அடிப்படை. என் குழந்தைகளிடம் பள்ளியில் இன்று என்ன கற்று கொண்டீர்கள், நண்பர்கள் உள்ளிட்டவை பற்றி பேசுவேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உரையாட வேண்டும். ஆசிரியர்கள் பணியும் முக்கிமானதாகும். திறமையை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும் இவ்வாறு பேசினார்.
மதுரை எய்ம்ஸ் தலைமை இயக்குனர் ஹனுமந்த்ராவ், கே.எம்.சி., நிர்வாக இயக்குநர் முத்துகோவிந்தன், மேனகா மில் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், தொழிலதிபர்கள் செல்வகணேஷ், சன்னாசி, ஜெகநாதன், குலோத்துங்கன், மாவட்ட வணிகர் சங்க தலைவர் செல்வக்குமார், வழக்கறிஞர்கள் கிருஷ்ணகுமார், செல்வக்குமார், கண்ணன், வடபுதுப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைதலைவர் ராஜ்மோகன், டாக்டர் பாஸ்கரன், கம்மவார் சங்க கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் தாமோதரன், தேனி நகராட்சி துணைத்தலைவர் செல்வம், இன்ஜினியர் பாலமுருகன், சீனிவாசன், பாலாஜி, அஜய்துர்கேஷ், கணேஷ், வேல்முருகன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தாளாளர் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு