காலநிலை மாற்ற பயிற்சி

தேனி: தேனியில் நகராட்சி சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் தலைமை வகித்தார்.

நகர் நல அலுவலர் கவிப்பிரியா, தேனி வனத்துறை ரேஞ்சர் சிவராம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், பொருட்கள் மறுசுழற்சி பயன்பாடு, குப்பைகளை பிரித்து வழங்குவதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர். நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் ஆய்வாளர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement