வால்வோ 'எஸ் - 90' 'ஏர் சஸ்பென்ஷன்' அடிப்படை அம்சம்

'வால்வோ' நிறுவனம், 'எஸ் - 90' என்ற அதன் சொகுசு செடான் காரை உலகளவில் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த கார், 'மைல்டு ஹைபிரிட்' மற்றும் 'பிளக்கின் ஹைபிரிட்' ஆகிய இரு வகையில் உள்ளது.
மேம்படுத்தப்பட்ட பம்பர்கள், சீரமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.எல்., மற்றும் ஹெட் லைட்டுகள், வெள்ளி நிற ஏர் வெண்ட்டுகள், புதிய அலாய் சக்கரங்கள், 'டி' வடிவ டெயில் லைட்டுகள் ஆகியவை டிசைன் மாற்றங்கள்.
9 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுக்கு பதிலாக, 11.2 அங்குல டிஸ்ப்ளே, புதிய மென்பொருள் பயன்பாடு, ஓ.டி.ஏ., மென்பொருள் மேம்பாடுகள், கேபினுக்குள் வரும் சத்தத்தை குறைக்க கூடுதல் தடுப்புகள் ஆகியவை உட்புற மாற்றங்கள்.
இதர அம்சங்களை பொறுத்த வரை, 7 காற்று பைகள், அடாஸ் பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா, 4 - ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 19 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, வெண்டிலேட்டட் சீட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதன், மைல்டு ஹைபிரிட் இன்ஜின் மற்றும் இதர உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை. பிளக்கின் ஹைபிரிட் இன்ஜின் கொண்ட காரின் பேட்டரி ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, ரேஞ்ச் 74 கி.மீ.,ல் இருந்து 80 கி.மீ., வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறப்பான பயண அனுபவத்துக்கு, ஏர் சஸ்பென்ஷன் அடிப்படை அம்சமாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, சீனாவில் அறிமுகமாகும் இந்த கார், நடப்பு நிதியாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இன்ஜின் - 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ சார்ஜிடு, மைல்டு ஹைபிரிட்
பவர் - 246.58 ஹெச்.பி.,
டார்க் - 350 என்.எம்.,
பூட் ஸ்பேஸ் - 500 லிட்டர்
எடை - 1,800 கிலோ
மேலும்
-
வீடியோ பதிவிடும் இந்தியர்களுக்கு இதுவரை யூடியூப் கொடுத்தது 21 ஆயிரம் கோடி ரூபாய்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு; ஒரு சவரன் ரூ.70,040!
-
மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி; டில்லியில் சோகம்
-
எல்லையில் மீண்டும் மீண்டும் வாலாட்டும் பாக்.,; இந்திய ராணுவம் தக்க பதிலடி
-
பாகிஸ்தானுக்கு உளவுவேலை; ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் கைது
-
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஆண்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு!