எல்லையில் மீண்டும் மீண்டும் வாலாட்டும் பாக்.,; இந்திய ராணுவம் தக்க பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடைய தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியர்களை கொன்றதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புக்கு தக்க பதிலடியை கொடுக்கும் முனைப்பை மத்திய அரசு காட்டி வருகிறது.

இந்த சூழலில், தங்கள் தரப்பை நியாயப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் அதிகாரிகள் கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும், எல்லையில் ராணுவ பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.

இந்தியாவை மீண்டும் மீண்டும் கோபப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், நேற்றிரவும் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச் மற்றும் அக்னூர் ஆகிய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement