ஹோண்டா 'டியோ 125'

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அதன் 'டியோ 125' ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, மாடலை பொறுத்து 7,300 முதல் 8,800 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்படும், 124 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின், 'இ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. 4.2 அங்குல 'டி.எப்.டி.,' டிஸ்ப்ளே, எரிவாயு செலவை குறைக்க 'ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப்' வசதி, ஸ்மார்ட் போன் இணைப்பு, நேவிகேஷன் எச்சரிக்கை, யூ.எஸ்.பி., 'சி - டைப்' சார்ஜிங் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 'ஹெச் - ஸ்மார்ட்' உயர்ந்த மாடலுக்கு மட்டும், 'கீலெஸ் ஸ்டார்ட்' வசதி வழங்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர், ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை, 96,749 ரூபாய் முதல் 1.02 லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

டீலர்: KUN Honda - 9600063514

Advertisement