தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ ராஜினாமா

சியோல்: தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.


ஹான் டக்-சூ,பழைய பழமைவாத கட்சியின் உறுப்பினர்.பொருளாதார நிபுணர், பன்னாட்டு உறவுகளில் வலுவான நிலைப்பாடு கொண்டவர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தியவர்.
தென்கொரியாவின் தற்காலிக அதிபராக உள்ளார். இந்நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தமாதம் தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறைகள் காரணமாக, அதிகாரப்பூர்வ பதவியில் இருந்தவர்கள் தேர்தலில் நிற்க முன்கூட்டியே பதவி விலக வேண்டும். அதன்படி, ஹான் டக்-சூ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா குறித்து ஹான் டக்-சூ கூறியதாவது:

எனக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட நான் இறுதியாகத் தீர்மானித்துள்ளேன்.

இவ்வாறு ஹான் டக்-சூ கூறினார்.

Advertisement