நேற்று கோல்கட்டா: இன்று ராஜஸ்தான்; ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஒரு ஹோட்டலில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஐந்து மாடி ஹோட்டலில் இருந்த சிலர், ஜன்னல்களில் இருந்து குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
அஜ்மீர் தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ் பிரசாத் கூறுகையில், "ஒரு குழந்தை உட்பட பலர் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டோம். இரண்டு பெண்கள் காயமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்துள்ளனர், என்றார்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் நேற்று மேற்கு வங்க ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
மும்பையில் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்? பந்துவீச்சு தேர்வு
-
ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி
-
ஜிஎஸ்டி வசூலில் புது உச்சம்: ஏப்., மாதம் ரூ.2.36 லட்சம் கோடி வசூல்
-
வாக்காளர் பட்டியலுடன் இறப்பு பதிவுகள் இணைப்பு; தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்
-
பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்