உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

சென்னை: உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எப்படி வெற்றி இது? என ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வரின் கருத்துக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு வசதிகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.
இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிரசும் திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரம் இருந்தபோது தி.மு.க.,காங்கிரஸ் இதனை செய்யவில்லை.
சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். caste census வேறு caste survey வேறு. கேஸ்ட் சர்வே தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க Caste Survey அவசியம். அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இது எங்களுக்கு தான் வெற்றி. உங்களுக்கு எப்படி வெற்றி இது? உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? என்னனே தெரியாமல் ஆளும் கட்சியினர் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அன்புமணி கூறினார்.






மேலும்
-
ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி
-
ஜிஎஸ்டி வசூலில் புது உச்சம்: ஏப்., மாதம் ரூ.2.36 லட்சம் கோடி வசூல்
-
வாக்காளர் பட்டியலுடன் இறப்பு பதிவுகள் இணைப்பு; தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்
-
பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
-
பரமக்குடியில் வயதான கணவன், மனைவி வீட்டில் தற்கொலை; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு