பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்துடன் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த ஒரு வாரமாக எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் உறவில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரூபியோ உடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என ரூபியோ கூறியதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும், தெற்கு ஆசியாவில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பதற்றத்தை தணிக்கவும் இந்தியாவும் , பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.
இச்சூழ்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்துடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சூழ்நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆலோசனை நடத்தினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு அமெரிக்க அமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், இந்த நேரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்பதாகவும், தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமை இந்தியாவிற்கு உள்ளது எனவும் அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை அவர் உறுதி செய்தார்.
இந்த ஆலோசனையின் போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரிடம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, பயிற்சிமற்றும் ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானின் வரலாற்றை ராஜ்நாத் சிங் எடுத்துக்கூறினார். காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு சர்வதேச சமுதாயம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் ராஜ்நாத் வலியுறுத்தினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.











மேலும்
-
விருதுநகர் தொழில் பூங்காவில் கட்டமைப்பு பணி
-
பிரீமியர் லீக் : 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
-
லார்ட்சில் 'உலக' பைனல்
-
பெண்கள் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
-
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: உலக 'யூத்' பளுதுாக்குதலில்
-
அனைத்து கட்சி கூட்டத்திற்கு வராமல் பிரதமர் எப்படி பீஹார் செல்லலாம்: கார்கே கேள்வி