விருதுநகர் தொழில் பூங்காவில் கட்டமைப்பு பணி

சென்னை;தமிழகத்தில் ஜவுளி துறை நிறுவனங்கள் பயன் பெற, விருதுநகர் மாவட்டத்தில், இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா, மத்திய -- மாநில அரசுகளின், 2,061 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னற்ற நிறுவனம், 1,052 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. அதன் அருகில் இ.குமாரலிங்கபுரத்தில், 581 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா ஒன்றை 'சிப்காட்' நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.

அங்கு, 56 கோடி ரூபாய் செலவில் சாலை, நடைபாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பூங்காவில் உள்ள மனைகள், பொதுவான தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

Advertisement