பெண்கள் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

பெர்த்: மூன்றாவது ஹாக்கி போட்டியிலும் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் மூன்று போட்டிகளில் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. பெர்த்தில் 3வது போட்டி நடந்தது.
இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கோர்ட்னி ஸ்கோனெல் (9வது நிமிடம்), கிரேஸ் ஸ்டீவர்ட் (52வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இந்திய வீராங்கனைகள், தங்களுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்தனர்.
இந்திய அணி, நாளை பெர்த்தில் நடக்கவுள்ள 4வது போட்டியில் சீனியர் ஆஸ்திரேலிய பெண்கள் அணியை எதிர்கொள்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரத்தில் 'டிரெக்கிங்' வசதியுடன் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா
-
அரசு மருத்துவமனை எதிரே நிழற்குடை இல்லாமல் அவதி
-
கூவம் திரபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
-
தண்டனைக்கு பயந்து தப்பியவர் போலீசிடம் மீண்டும் சிக்கினார்
-
தொழிலாளர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
-
சாலையில் உலா வரும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் திக்... திக்... பயணம்
Advertisement
Advertisement