பிரீமியர் லீக் : 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

ஜெய்ப்பூர்: பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இன்றைய ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் நடந்து வரும் 50-வது லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் ஷர்மா - ரிக்கெல்டன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து பவர் பிளேவான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் குவித்தனர்.
29 பந்துகளில் அரைசதம் விளாசிய ரிக்கெல்டன், 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது நடப்பு சீசனில் அவருக்கு 3வது அரைசதமாகும். மறுமுனையில் அதிரடியாக ஆடி ரோகித் ஷர்மா, 53 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை சேர்த்தது. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா 23 பந்துகளில் தலா 48 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்
218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஸ்தான் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்து ஆட்டந்தார். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 91 ரன்கள் என்ற நிலையில் ரன் எடுக்க திணறியது. இறுதியில் 14.1 ஓவரில்ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
.
மேலும்
-
ராமேஸ்வரத்தில் 'டிரெக்கிங்' வசதியுடன் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா
-
அரசு மருத்துவமனை எதிரே நிழற்குடை இல்லாமல் அவதி
-
கூவம் திரபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
-
தண்டனைக்கு பயந்து தப்பியவர் போலீசிடம் மீண்டும் சிக்கினார்
-
தொழிலாளர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
-
சாலையில் உலா வரும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் திக்... திக்... பயணம்