தடுப்பு இல்லாத சாலை வளைவால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் தத்தனுார் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி வழியே, வளத்தாஞ்சேரி - பேரிஞ்சாம்பாக்கம் செல்லும் பிரதான சாலை செல்கிறது.

இந்த சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன.

போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில், வளத்தாஞ்சேரி அருகே சாலை வளைந்து செல்கின்றது.

தடுப்பு இல்லாத இந்த வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில்சிக்குகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவு இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement