எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி

12

புதுடில்லி: இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98. 24 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.

கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2023ம் ஆண்டு மே 19ம் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் மதிப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டது முதல் பொதுமக்கள் அவற்றை வங்கிகளில் திரும்ப செலுத்தினர்.


அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 30ம் தேதி, 98.24 சதவீதம் நோட்டுகள் திரும்ப வந்து விட்டன. ரூ.6,266 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் (1.76 சதவீதம்) திரும்ப வரவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராத நோட்டுகள், இந்தியா மட்டுமின்றி, நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement