சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்
கரூர் அருகே, சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அருகே தான்தோன்றிமலை தின்னப்பா நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. அப்போது, சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை, வேறு இடத்துக்கு மாற்றாமல் விட்டு விட்டனர்.
இந்நிலையில், மின் கம்பம் உள்ள சாலையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில், பொதுமக்கள் சென்று வருவதால், இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.
இதனால், தின்னப்பா நகரில் சாலையின் நடுவே உள்ள, மின் கம்பங்களை, சாலையின் ஓரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
**********************************
மேலும்
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை
-
பல்லடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!