பழங்குடியினர் குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணுார் ஊராட்சியில், 2.23 கோடி ரூபாய் மதிப்பில், 44 பழங்குடியினர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன கட்டுமான பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, காட்ராம்பாக்கம் ஊராட்சியில், 1.82 கோடி ரூபாய் மதிப்பில் 36 பழங்குடியினர் குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும், வீடுகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகள் மற்றும் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளிடம் விரைவாக ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
மேலும், காட்ராம்பாக்கத்தில் வசித்துவரும் பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் குடியிருப்புகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை