அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்; விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில் உணவு பதப்படுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், வாடகை கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும்.
தற்போது ஈர்த்மூவர்ஸ், ஜே.சி.பி., டிப்பர், லாரி, டிராக்டர், பஸ், கான்கிரீட் மிக்சர், ரிக் போரிங் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் கடனுதவி பெறலாம். மானியம் மொத்த திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதமாகும். மானிய உச்ச வரம்பு உற்பத்தி தொழிலுக்கு ஒரு கோடி ரூபாய், சேவை தொழிலுக்கு, 75 லட்சம் ரூபாய், வியாபார தொழிலுக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் (10 ஆண்டுகளுக்கு மிகாமல்) 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தொழில் முனைவோரின் சொந்த நி

தியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு, 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். வயது வரம்பு, 18 முதல், 55க்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் கடனுதவி பெறமுடியும். www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், தான்தோன்றிமலை, 04324 255 177/255179 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement