கூவம் திரபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

கூவம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில். இங்கு சித்தரை திருவிழா நேற்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா நடக்கிறது.

தேரோட்டம் வரும் 7ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.

வரும் 14ம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி ரிஷப வாகன சேவையுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement