மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகரில் மே தினத்தை முன்னிட்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது யானைக்குழாய் தெருவில் டாஸ்மாக் கடை அருகே முட்புதரில் வைத்து அரசு அனுமதியின்றி சுய லாபத்திற்காக மது விற்பனை செய்த ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ராஜன் 28, ரமேஷ்குமார் 34 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 376 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement