புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை முதல் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடந்த பின் கொடிமரத்திற்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின் பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. மகாதீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

11 நாட்கள் நடைபெறும் விழா காலங்களில் தினமும் அம்மன் பூத வாகனம்,, கண்ணாடி, தண்டியல், பூ, தட்டு உள்ளிட்ட சப்பரத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சிறப்பு நிகழ்வான பூக்குழி திருவிழா மே 10ல் நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு ஜெய்குமார் ராஜா, கார்த்திக் ராஜா, உதயகுமார் ராஜா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement