ஏசியில் பதுங்கிய பாம்பு

சிவகாசி: சிவகாசியில் வீட்டில் ஏசிக்குள் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.

சிவகாசி அம்மன் நகரை சேர்ந்தவர் அரசன் ராமன். இவரது வீட்டுக்குள் பாம்பு புகுந்ததையடுத்து சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வீட்டில் தேடிய போது அங்கிருந்த ஏசிக்குள் பதுங்கியிருந்தை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அதனை உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

Advertisement