நிர்வாகிகள் தேர்வு

திருச்சுழி: திருச்சுழியில் புதிய வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சுழியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். நேற்று புதிய வக்கீல்கள் சங்க தேர்தல் நடந்தது.

வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் தங்கபாண்டியன், பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் விக்னேஷ் பாண்டியன், துணைச் செயலாளர் முனியசாமி சங்க உறுப்பினர்கள் சங்கிலி முருகன், பிரேம்குமார், கந்தசாமி, விஜயகுமார், ராஜாமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் அதிகாரிகளாக சிங்கராமு, முருகன், இஸ்மாயில் செயல்பட்டனர்.

Advertisement