பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இங்குள்ள பள்ளி ஒன்றில் மாணவரும், மாணவியும் 2024 ல் பிளஸ் 2 படித்தனர். 17 வயதான இவர்கள் நண்பர்களாக பழகினர். கடந்தாண்டு டிச., 8 ல் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தன் வீட்டிற்கு மாணவர் அழைத்து சென்றார். பல முறை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற மாணவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் அம்மாணவி 4 மாத கர்ப்பமுற்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சிவகங்கை மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி மற்றும் போலசீார் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவரை கைது செய்தனர்.

Advertisement