வெட்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  

புவனகிரி: புவனகிரி அடுத்த மருதுார் தலைக்குளம் வெட்காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 4ம் தேதி நடக்கிறது.

இதனை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் முடிந்து, கடம் புறப்பாடு நடக்கிறது. 10:00 மணிக்கு ராஜ கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement